Politics
"திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : திவாகரன்
தஞ்சையில் தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், “திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்” எனப் பேசினார்.
திருமண விழாவில் திவாகரன் பேசியதாவது, “இன்றைய தமிழகத்தின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியார் பிரச்சனையில் கன்னடத்திலிருந்து வந்த ஒருவர் பெரியாரை இழிவாகப் பேசுகிறார்.
இதேபோல் கர்நாடகாவில் நாம் கன்னடர்களை இழிவாகப் பேசினால் சும்மா விடுவார்களா? அதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழர்களுக்காக யார் போராடுவார்களோ, தமிழர்களை யார் காப்பாற்றுவார்களோ அவர்களின் பின்னால் நாம் நிற்கவேண்டும்.
அதற்கு கண் முன் தெரிகின்ற ஒரே ஒரு நட்சத்திரமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திராவிட இயக்கங்களை கட்டிக் காக்கக்கூடிய ஒரே தலைவராக அவரே இருக்கிறார்.” எனப் பேசினார்.
மேலும், அவர் பேசுகையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தான் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அந்த வெற்றி பெரும்பாலான இடங்களில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 85% உள்ளாட்சி இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கும்.
எங்கள் பகுதியில் 4 ஒன்றியங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. வெற்றிச் சான்றிதழை தராமல் இழுத்தடித்துவிட்டு அடுத்த நாள் செய்தித்தாளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!