Politics
"எம்.ஜி.ஆரால் தான் அண்ணாவே நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார்" - ராஜேந்திர பாலாஜி பேச்சால் சர்ச்சை!
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "எம்.ஜி.ஆர் அருகில் இருந்ததால்தான் அண்ணா நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார். எம்.ஜி.ஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கு மக்கள் ஓட்டு போட்டனர்.
இதுதான் உண்மை. கலைஞர் முதலமைச்சராக காரணமும் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆரை பார்த்தவர்கள் அவரைப் போல் வாழவேண்டும் என நினைத்தார்கள். அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது" எனக் கூறினார்.
எம்.ஜி.ஆர் அருகில் இருந்ததால் தான் பேரறிஞர் அண்ணா மக்களால் அடையாளம் காணப்பட்டதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புகளில் இருந்த மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைவராக ஏற்றுக்கொண்ட அண்ணாவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுமைப் படுத்தியுள்ளதாக அக்கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, தங்கள் தலைவர்கள் முன்னோடியாக ஏற்றுக்கொண்டவரும், தங்கள் கட்சியின் பெயரிலேயே இருப்பவருமான பேரறிஞர் அண்ணாவையே சிறுமைப் படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!