Politics
“புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் நாம் சுயமரியாதையுடன் நடமாட முடியாது” - கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெறக்கோரி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய தேசிய கல்விக்கொள்கையில், சமூகத்தில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்த எந்தக் கல்வியும் இடம்பெறவில்லை.
நாம் நம்முடைய நாட்டை எந்த வகையில் எடுத்துச்செல்ல நினைக்கின்றோமோ அதற்கு எதிராக இந்தப் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்விக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் நாம் அனுமதிக்கக் கூடாது. மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் உள்ள பா.ஜ.க எந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறதோ அந்தத் திட்டத்தை எல்லாம் மக்களுக்கு எதிராக கொண்டு வருகிறது. முதலாளித்துவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.
புதிய கல்விக் கொள்கையை மட்டும் அமல்படுத்த அனுமதித்தோம் என்றால், எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் நடமாட முடியாது. இந்த மண்ணில் நாமும் நம்முடைய வாரிசுகளும் அடிமைகளாக வாழக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம்'' எனத் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மல்லை சத்யா, திருமுருகன் காந்தி மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!