Politics
"உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது குறித்து முடிவு” - மு.க.ஸ்டாலினை சந்தித்த முஸ்லிம் லீக் தலைவர்கள்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் ஆகியோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், “உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக கருத்துகள் விவாதிக்கப்பட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
தமிழகத்தை ஆளக்கூடிய அரசு உண்மையிலேயே தேர்தல் நடத்தினால் தி.மு.க அமோக வெற்றி பெறும். மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஜனநாயகப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.
நாளை பாராளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தை பாரதிய ஜனதா கூட்டியுள்ளது. நடைபெற உள்ள பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் நீங்களும் பங்குபெற வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார். அவரது கருத்து எங்கள் கட்சி தலைவர்களிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!