Politics
‘மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்’ : பா.ஜ.க.வுக்கு ‘டாட்டா’ காட்டும் சிவசேனா!- பின்னணி என்ன?
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., – சிவசேனா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான இடங்கள் கிடைத்தது.
இருப்பினும் இரு கட்சிகளிடையே 50;50 என்ற அதிகார பகிர்வு குறித்த பிரச்னையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இரு தரப்பினரும் ஏற்கனவே நடந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதில் முரண்டு காட்டி வருவதாகவும் தெரிகிறது. இதனால் தாக்ரே, முதல்வர் பட்னாவிஸ் தங்களின் அதிருப்தியை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவேசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான சஞ்சய் ரவுத் மற்றும் மூத்த எம்பி.,க்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை , அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளனர்.
இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதித்திருக்கலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே சரத்பவார் எதிர்கட்சி வரிசையில் அமருவோம் என தெளிவுபட அறிவித்திருந்த நிலையில் தற்போதைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அரசியலில் எதிரும் புதிருமான விளங்கி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சிவசேனாவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், சிவசேனா ஏன் பா.ஜ.க.,வை விட்டு விலக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைக்க பா.ஜ.க முயற்சி செய்ததாகவும், அதன்காரணமாகத் தான் சிவசேனா ஆட்சி அமைக்க முந்திக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான முடிவுகளை எட்டும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலையை நாடே உற்றுநோக்கி வருகிறது.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!