Politics

“சிலர் சட்டத்தை கையில் எடுத்து கொள்கின்றனர்; அது நாட்டின் ஆட்சியமைப்பை பாதிக்கும்” மன்மோகன் சிங் வேதனை!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். அதேப்போன்று டெல்லியில் ராஜிவ் இளைஞர் அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்திற்கு சிறப்பான பணிகளை மேற்க்கொண்டவர்களுக்கு ‘ராஜிவ் காந்தி ஜன்ம பஞ்சா சப்ததி புராஸ்கார்’ விருது வங்கபட்டது. அந்த விருதுகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினர்.

பின்னர் சிறப்புரையாற்றிய அவர், “இந்தியாவில் தற்போது சகிப்புத்தன்மை இன்மை, இன, மொழி பாகுபாடுகள் சில குறிப்பிட்டப் பிரிவினர் மீது வன்முறையாக கட்டவிழ்த்து விடப்படுகிறது. சில குழுக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இது நாட்டின் ஆட்சி அமைப்பு முறையை பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கவேண்டும்”. என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நமது நாட்டுக்கு தேவையான உதவிகளை உண்மையாக செய்தார். அதனால் தான் இந்தியா அறிவியல் பூர்வமான உலகிற்குள் காலடியை பதித்தது. அதுமட்டுமின்றி வெளிநாடுகளுடனான பேச்சுவார்த்தை இந்தியாவின் சில முக்கிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது. குறிப்பாக சீனா உடன் ஏற்பட்ட சுமுக பேச்சுவார்த்தையினால் பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த மிசோரம் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.” என அவர் தெரிவித்தார்.