Politics
வேலூர் தேர்தல் தோல்வி : பா.ஜ.க மீது குற்றஞ்சாட்டிய எடப்பாடி - காதிலேயே போட்டுக்கொள்ளாத அமித்ஷா!
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, பா.ம.க, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் அ.தி.மு.க ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முறைகேடு செய்து வெற்றி பெற்றது.
ஆகையால், புதுச்சேரி உட்பட 38 பாராளுமன்றத் தொகுதிகளில் கோட்டை விட்டதை எப்படியாவது, வேலூர் தொகுதி தேர்தலில் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை கொண்டிருந்த அ.தி.மு.க, பா.ஜ.கவு-க்கு பலத்த அடியே கிடைத்தது. ஏ.சி. சண்முகத்தை வேட்பாளராக நிறுத்திய அ.தி.மு.க போராடி தோல்வியையே பரிசாக பெற்றது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை வந்திருந்த அமித்ஷா, “கடந்த முறை நடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த ஏ.சி. சண்முகம் 3.24 லட்சமும், அதிமுகவின் செங்குட்டுவன் 3.84 லட்சம் வாக்குகளும் பெற்றதால் இந்த முறை நிச்சயம் 7 லட்சத்துக்கும் மிகாமல் வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்தோம்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. 8000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருப்பது மிகப்பெரிய கேவலம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது வாக்கு வங்கிகளை அதிகரித்துக்கொள்ளுங்கள்” என காட்டமாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, “வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியர்களின் ஓட்டுகள் பறிபோனதுதான் வேலூரில் அ.தி.மு.க தோல்வியுற்றதற்கு காரணம்” என எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுக்கு பதிலளித்துள்ளார்.
ஏனெனில், முத்தலாக், காஷ்மீர் விவகாரம் என அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரானவையாக இருந்ததால், அவர்கள் நம்மை திட்டம் போட்டு தோல்வி அடைய வைத்திருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். ஆனால், இதையெல்லாம் அமித்ஷா காதிலேயே போட்டுக்கொள்ளவில்லையாம். இது எடப்பாடியை இன்னமும் வருத்தமடையச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !