Politics
கொள்கை எல்லாம் நமக்கு எதுக்குங்க ? பிரபலங்களை வளைத்து ஓட்டு வாங்க நினைக்கும் பா.ஜ.க மாஸ்டர் பிளான் இது !
இந்தியா சார்பில் காமென்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்த மல்யுத்த வீராங்கனை, பபிதா போகத் இன்று பா.ஜ.கவில் இணைந்தார்.
ஹரியானா மாநிலம் இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பிரபலமான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோர் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘டங்கல்’ படம் பபிதா போகத், கீதா போகத் சகோதரிகள் மற்றும் அவரது தந்தை மஹாவீர் போகத் ஆகியோரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டதுதான். ‘டங்கல்’ படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், அப்படத்திற்கு காரணமான பபிதாவை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பா.ஜ.க.
விளையாட்டு, சினிமா ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தங்கள் கட்சிக்குள் இழுத்து, அதன் மூலம் தங்களது வாக்கு வங்கியை வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது பா.ஜ.க. இதைத் தங்கள் அரசியல் உத்தியாகவே பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பா.ஜ.க-வுக்குள் இழுக்கப்பட்டு அவர் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜ.க-வில் சேர்க்கப்பட்டு, நடந்து முடிந்த தேர்தலின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார்.
பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தீபா மாலிக், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌகான் உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை பிரபலங்களும் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.
சன்னி தியோல், இஷா கோபிகர், மேற்கு வங்க நடிகை பர்னோ மித்ரா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். கட்சியில் சேராமல் தங்களுக்கு ஆதரவாக திரைப் பிரபலங்களை குரல் கொடுக்க வைக்கும் உத்தியையும் கையாண்டு வருகிறது பா.ஜ.க.
மூன்று மாதங்களில் வரவுள்ள ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது பா.ஜ.க சார்பில் தோனியை களமிறக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. மோசடி புகார்களில் தோனி சிக்கவைக்கப்பட்டது, இராணுவத்தில் பயிற்சி எடுத்தது ஆகியவையும் அவரை அரசியலில் இறக்குவதற்கான காய்நகர்த்தல்களே எனக் கூறப்படுகிறது.
‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்கிற பெயரில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் செலவில் பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது பா.ஜ.க. தமிழகத்தில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவதும் அதன் ஒரு பகுதியே எனும் சந்தேகமும் நிலவி வருகிறது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!