Politics
இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி... புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையோட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ராஜினாமாவை வாபஸ் பெறச் சொல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (ஆகஸ்ட் 10) கூடுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது.
ராஜினாமா முடிவை ராகுல்காந்தி மாற்றிக்கொள்ளாததால் காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸின் அடுத்த தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் உட்பட பலர் பரிந்துரைத்து வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸுக்கு காந்தி குடும்பத்தில் இருந்து எவரும் இனி தலைவாராக மாட்டார்கள் என ராகுல்காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !
-
“இது ஆன்மிகம் அல்ல; கேடுகெட்ட அரசியல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“மதுரை தொழில் நகரமாகவும் புகழ் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை இலட்சியம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!