Politics
“பா.ஜ.க-வில் இணையுமாறு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளை மிரட்டுகிறார்கள்” : மம்தா குற்றச்சாட்டு!
பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் அங்குள்ள பிரதான கட்சி மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கியும், அவர்களை மிரட்டியும் பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டு அந்த மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறது. குறிப்பாக கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் தனது மோசமான அரசியலை அப்பட்டமாக செய்து காட்டியுள்ளது பா.ஜ.க.
இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் பா.ஜ.கவினர் அங்குள்ள பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களை மறைமுகமாக மிரட்டும் வேலையில் இறங்கியுள்ளது. அதனால் பிற கட்சியினர் பா.ஜ.கவில் இணையும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, "திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமை அதிகாரிகள் பா.ஜ.கவில் இணையுமாறு மிரட்டுகிறார்கள். திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவில் இணைந்தால், சலுகையாக ரூ.2 கோடியும், ஒரு பெட்ரோல் பங்கும் வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். நீங்கள் பா.ஜ.கவில் இணையவில்லை என்றால், நிதி மோசடி போன்ற வழக்குகளில் சிக்க வைத்துவிடுவோம் என வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர்” அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க விசித்திரமான முறையில், தேச நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அதிகாரம் இருப்பதால் தகவல்கள், ஆலோசனைகள் என எதையும் முன்வைக்காமல் மசோதாக்களை கொண்டுவந்து அமல்படுத்த துடிக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்