Politics
நிதி ஆயோக் கூட்டம்: மம்தா பானர்ஜியை தொடர்ந்து சந்திரசேகர ராவும் புறக்கணிப்பு!
நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் இருப்பதால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெலங்கானா மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!