Politics
“மோடி, மக்களை பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றியடைந்துள்ளார்” : ராகுல் காந்தி சாடல்!
கேரளாவின் வயநாடு தொகுதியில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு இரண்டாவது நாளாக நன்றி தெரிவித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மக்களை சந்திப்பதற்காக திறந்த வேனில் வந்த ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள், தொண்டர்கள் திரண்டு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அப்போது மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களை பிளவுபடுத்தியே, மோடி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியை எட்டியுள்ளார் எனச் சாடினார்.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் வெறுப்புணர்வையும், பொய்களையும், விஷத்தன்மையையுமே கொண்டிருந்தது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், மோடியின் பிரிவினைவாதத்துக்கு எதிராக ப்போராட நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, வயநாடு தொகுதி மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றமான பொதுவெளியிலும் குரல் கொடுத்துப் பாடுபடுவேன் எனவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!