Politics

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனுமில்லை - மம்தா பானர்ஜி

மத்திய திட்டக்குழுவுக்கு பதிலாக ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்களை வரையறுப்பதற்காக நிதி ஆயோக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

நிதி ஆயோக்கின் ஐந்தாண்டு ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் வருகிற ஜூன் 15 அன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி, மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு நிதி அளிக்கும் அதிகாரமும், திட்டங்களுக்கு உதவி புரியும் அதிகாரமும் நிதி ஆயோக் அமைப்புக்கு இல்லை எனக் கூறி, எதிர்வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்பதின் மூலம் எந்த பயனும் கிடைக்கபெற போவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.