Politics
#LIVE பிரதமராக பதவியேற்றார் மோடி - அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் பட்டியல்!
தற்காலிக சபாநாயகராக மேனகா காந்தி!?
மேனகா காந்தி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு அமைச்சரவைகளில் அமைச்சராகப் பதவி வகித்துள்ள மேனகா காந்திக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.
தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படவுள்ள மேனகா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதோடு, மக்களவையின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நிறைவு!
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நிறைவடைந்ததையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் கூடியிருந்த அனைவரும் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர்.
தேபாஸ்ரீ சௌத்ரி மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்பு!
பிரதாப் சந்திர சாரங்கி, கைலாஷ் சௌத்ரி, தேபாஸ்ரீ சௌத்ரி ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
- பாபுல் சுப்ரியோ பதவியேற்பு!
பாபுல் சுப்ரியோ, சஞ்சீவ்குமார் பால்யன், அனுராஜ் சிங் தாக்கூர், நித்யானந்த் ராய் ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
- ராம்தாஸ் அத்வாலே பதவியேற்பு
ராம்தாஸ் அத்வாலே, புருஷோத்தம், தாதாசாகேப் ராவ், கிஷன் ரெட்டி ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
- நிரஞ்சன் ஜோதி இணை அமைச்சராக பதவியேற்பு
அஷ்வினி குமார் சௌபே, ஃபகான் சிங் குலாஸ்டே, ராஜ்குமார் சிங், நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
- வி.கே.சிங் இணை அமைச்சராகப் பதவியேற்பு
முன்னாள் இராணுவ தளபதி வி.கே.சிங் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார்.
- பிரலாத் சிங் படேல் இணை அமைச்சராகப் பதவியேற்பு!
பிரலாத் சிங் படேல், மன்ஷுக் மாந்தவியா ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
- ஜிதேந்திர சிங் மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்பு!
ஸ்ரீபத்நாயக், ஜிதேந்திர சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
- கிரண் ரிஜிஜு பதவியேற்பு!
முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
- குர்கான் எம்.பி ராவ் இந்தர்ஜித் சிங் பதவியேற்பு!
ராவ் இந்தர்ஜித் சிங், சந்தோஷ் கங்வார், கஜேந்திர சிங் செகாவத், தவார்சந்த் கெலாட் ஆகியோர் பதவியேற்பு!
- சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் பதவியேற்பு!
மகேந்திரநாத் பாண்டே, சிவசேனாவின் அர்விந்த் சாவந்த், கிரிராஜ் சிங் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
- முக்தார் அப்பாஸ் நக்வி பதவியேற்பு!
தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, ப்ரலாத் ஜோஷி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
- பியுஷ் கோயல் பதவியேற்பு!
பியுஷ் கோயல், டாக்டர்.ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
- அமைச்சராக பதவியேற்றார் ஸ்மிருதி இரானி
- அர்ஜூன் முண்டா பதவியேற்பு!
மத்திய அமைச்சர்களாக போக்ரியல் நிஷாங்க், அர்ஜூன் முண்டா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
- ஜெயசங்கர் பதவியேற்பு!
முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
- ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவியேற்பு!
சிரோன்மணி அகாளி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் கேபினெட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
- தொலைக்காட்சியில் பார்த்த மோடியின் தாயார்!
நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், பிரதமராக மோடி பதவியேற்றதை தொலைக்காட்சியில் பார்த்து கைதட்டினார்.
- நரேந்திர சிங் தாமோர் பதவியேற்பு!
- ராம்விலாஸ் பஸ்வான் பதவியேற்பு!
மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் ராம்விலாஸ் பஸ்வான்.
- நிர்மலா சீதாராமன் பதவியேற்பு!
மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.
- சதானந்த கௌடா மத்திய அமைச்சராகப் பதவியேற்பு!
மத்திய அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார் சதானந்த கௌடா!
- மத்திய அமைச்சராகப் பதவியேற்றார் நிதின் கட்காரி!
- மத்திய அமைச்சராகப் பதவியேற்றார் அமித்ஷா!
- ராஜ்நாத் சிங் பதவியேற்பு!
லக்னோ பா.ஜ.க எம்.பி ராஜ்நாத் சிங் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
- பிரதமராக பதவியேற்றார் மோடி!
இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார் நரேந்திர மோடி. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
- மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள் வந்தடைந்தனர். சிறப்பு விருந்தினர்களான வெளிநாட்டு தலைவர்களும் விழா நடைபெறும் குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை.
Also Read
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
-
திருட்டு வதந்தி : பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அடித்து கொலை - உ.பி-யில் அதிர்ச்சி!
-
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல் : பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் கைது!
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!