Politics
கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் வதந்திகள் : பிரியங்கா காந்தி
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.
அதில், “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதரிகளே மற்றும் சகோதரர்களே! தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பவை வெறும் வதந்திகள். அதனைக் கண்டு நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள். இந்த அனைத்து சம்பவங்களின் மத்தியிலும் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு, வெளியே நாம் பாதுகாக்கும் வகையில் கவனத்துடன் பணிகளை மேற்க்கொள்ளவேண்டும். நாம் அனைவரும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவுகள் நிச்சயம் நல்ல முடிவைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று செய்தியை ஆடியோ மூலமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!