Politics
ராகுல் காந்தி -சீதாராம் எச்சூரி சந்திப்பு: ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் எதிர்க்கட்சிகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வரும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தார். பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்தார். அதைத் தொடர்ந்து மாலை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் இடையே பேசிய சந்திரபாபு நாயுடு”, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு, பா.ஜ.கவை எதிர்க்கும் யார் வேண்டுமானாலும் வரலாம். தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்றார். இதன் மூலம் பா.ஜ.க கூட்டணியில் இல்லாத கட்சிகளை இணைத்துக் கொள்வதிலும் மும்முரம் காட்டப்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரியை சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. இதன் தொடர்ச்சியாக மாலை சீதாராம் எச்சூரி - ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ந்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகளை பொருத்து ஆட்சி அமைப்பது பற்றி உடனடியாக முடிவெடுக்க, எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!