Politics
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் தெலங்கானா முதல்வர்!
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர் ராவ், இன்று சென்னை ஆழ்வார்பேட்டியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேர்தலுக்கு முன்பே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.
இந்தச் சந்திப்பின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் முடிவில் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுச் சிலையை சந்திரசேகர் ராவுக்கு பரிசாக வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
நாடு முழுவதும் நடைபெறும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் முக்கியத் தலைவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தி.மு.க சார்பில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவிடம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய துணைபுரிய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தச் சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!