Politics
“திமுக வெற்றி பெற்றதும் 25 அல்ல; 10 நாட்களிலேயே ஆட்சியை மாற்றுவோம்” - துரைமுருகன் சவால்!
மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் 18 ம் தேதி நடந்து முடிந்துள்ளது. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் மே 19 நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது : இந்த கூட்டத்திற்கு அதிக அளவில் பெண்கள் கலந்துக்கொண்டுள்ளதை பார்க்கும்போது தி.மு.க வெற்றி உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி அவர்களிடம் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால் தான் அவரை தி.மு.க-விற்கு அழைத்து வந்து விட்டோம். கருணாநிதி ஆட்சியின்போது இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தார். அதனை எதிர்த்து தி.மு.க போராடி மீண்டும் அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம்.
துரைமுருகன் ஒரு தனிப்பட்ட சத்தி அல்ல. தி.மு.க-வின் பொருளாளர், சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர். ஏன் பல தேர்தல்களைச் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நடைபெற்ற தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றால் 25 நாளில் இந்த ஆட்சியை மாற்றி காட்டுவேன் என்றேன். அப்படி கூறியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!