Politics
மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் சுற்றுப்பயண செலவு ரூ.393 கோடி : RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை மும்பையைச் சேர்ந்த ஒருவர் கோரி இருந்தார்.
அதன் அடைப்படையில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.263 கோடியும், உள்நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர்.
மத்திய இணை அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.29 கோடியும், உள்நாட்டுப் பயணங்களுக்கு ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2014-15ம் நிதியாண்டில் மட்டுமே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களின் போது ரூ.88 கோடி செலவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மோடி 49 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!