சாத்வி பிராக்யா சிங்
Politics

போபால் பா.ஜ.க வேட்பாளர் சாத்வி பிரக்யாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

போபால் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் அமைந்திருந்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகார் மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரச்சாரம் செய்ய 72 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள போதிலும் கூட்டங்களில் பேசியது ஏன் என விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.