Politics
பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார் - மம்தா பானர்ஜி சாடல்
பிரதமர் மோடி கடந்த 29-ந்தேதி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்காளத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல். ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
மேலும், பா.ஜனதா வெற்றி பெற்றவுடன் 40 எம்.எல்.ஏ.க்களும் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள். மம்தாபானர்ஜி குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காணுகிறார் என்று பேசினார்.
இது குறித்து மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறும்போது, மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுவது போல் பேசுவது அவமானமானது. அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும். அவர் பிரதமராக நீடிக்க உரிமை கிடையாது.
நேதாஜி போன்ற தலைவர்களை மக்கள் மதிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் கால் பதிக்கலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். அவரது கனவு நிறைவேறாது என்றார்.
ஏற்கனவே , திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!