Politics
பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர், மே 23ந்தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் எம்.எல்.ஏ.க்கள் உங்களை விட்டு விலகி விடுவர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் இன்றுவரை எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலவை எம்.பி. தெரீக் பிரையன் கண்டனம் தெரிவித்ததுடன், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில், சட்டவிரோத முறையில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
குதிரை பேரம் நடத்தும் வகையிலான இந்த பொய்யை பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவர் பேசியதற்கான சான்று பற்றி நீங்கள் மோடியிடம் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் வைக்கிறோம்.
அவர் தக்க சான்றினை சமர்ப்பிக்க தவறினால் தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், தூண்டக்கூடிய மற்றும் ஜனநாயகமற்ற முறையில் பேசியதற்காக பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளது.
Also Read
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!