Politics
சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு !
மதுரை தொகுதியில் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், ஆவணங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறி தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி சார்பில் வெங்கடேசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் N.R.இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.
இது தொடர்பாக முறையான விசாரணை நடைப்பெறவில்லை என்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஒப்புதல் அளித்தனர்.
Also Read
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!