Modi at Varanasi
Politics

ரூ.30 லட்சத்திற்கு தூவப்பட்ட ரோஜாப்பூக்கள்... மோடி தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்!?

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது, சாலைகளில் தூவப்பட்ட ரோஜாப்பூக்களுக்கு மட்டுமே ரூபாய் 30 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் கலந்துகொண்ட பேரணியில் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர். பேரணிக்காக அரசு அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாநகராட்சிப் பணியாளர்கள் சாலையைக் கழுவும் வேலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சாலையைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.

பேரணியின் போது சாலைகளில் தூவப்பட்ட ரோஜாப்பூக்கள் மட்டுமே ரூபாய் 30 லட்சம் மதிப்பிலானவை எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரின் அதிகபட்ச செலவுத் தொகையே ரூபாய் 70 லட்சம் தான். ஆனால், ரோஜாப் பூக்களுக்கே அதில் கிட்டத்தட்ட பாதி தொகையைச் செலவிட்டுள்ளார் மோடி.

பா.ஜ.க-வின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், கண்கூடாக நடந்த இந்த தேர்தல் விதிமுறை மீறலைக் கண்டுகொள்ளுமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.