Politics
தூத்துக்குடி தேர்தலை ரத்து செய்யவே வருமான வரித்துறை சோதனை - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது. எந்த வித ஆவணங்களும் இன்றி, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் அவரது வீட்டில் பணம் ஏதும் கிடைக்காததால் வருமான வரித்துறை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது.
சோதனை குறித்து பேசிய கனிமொழி எம்.பி “ஜனநாயகத்தை படுகொலை செய்து வேலூரில் தேர்தலை ரத்து செய்தது போலவே, தோல்வி பயத்தால் தூத்துக்குடியிலும் தேர்தலை ரத்து செய்ய பா.ஜ.க வருமான வரித்துறையை ஏவியுள்ளது” என்றார்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!