Politics
எனக்கு வாக்களிக்கவில்லை என்றால்... முஸ்லிம்களை மிரட்டிய மேனகா காந்தி
முஸ்லிம் மக்களை மிரட்டும் விதமாக பேசி மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச் மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மேனகா காந்தி. அந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் டூரப் காணி கிராமத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ” முஸ்லிம்கள் வாக்கு இல்லாமலும் நான் வெற்றி பெறுவேன். அப்படி முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், பின் என்னிடம் எந்தவித வேலைகளையும் செய்துதர வேண்டி எதிர்பார்க்கக் கூடாது. முஸ்லிம் வாக்காளர்கள், இதனை புரிந்துகொள்ள வேண்டும். இது கொடுக்கல் வாங்கல் விவகாரம் போன்றது. நாம் என்ன காந்தியின் குழந்தைகளா? நீங்கள் வாக்களிகாமல் நான் மட்டும் உங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்கு?” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேனகா காந்தியின் இந்த பேச்சு முஸ்லிம் மக்களை நாட்டை விட்டே வெளியேற்றும் பா.ஜ.கவின் இந்துத்துவ கொள்கையின் வெளிப்பாடே, என காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!