Politics
ஏழைகளை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை - பிரியங்கா காந்தி
உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக டோலிசர்மா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஜப்பானுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து பேசுகிறார்.பாகிஸ்தானுக்கு போய் உணவருந்தி வருகிறார். சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கிறார். ஆனால் அவருடைய சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஏழை மக்களை அவர் சந்தித்து பேசுவதை நாம் பார்த்து இருக்கிறோமா?
அவருடைய தொகுதியில் உள்ள ஏழைகளை சந்திக்க அவருக்கு நேரம் இல்லை. அனைத்து பிரச்சனைகளிலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்காக என்ன செய்து இருக்கிறது? எதுவும் செய்யவில்லை.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!