உணர்வோசை
மல்லாக்க படுத்து விட்டத்தை வெறுமனே பார்ப்பது ஆணுக்குதான் சாத்தியம்.. பெண்ணால் முடியாது ! ஏன் தெரியுமா ?
இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலுறவு அல்லது மண உறவு என்பது ‘கடலளவு நேசிக்கிறேன், மலையளவு வெறுக்கிறேன்’ ரகம்தான்.
ஏன் தெரியுமா?
இரு பாலருக்கும் பழகுவதற்கு அனுமதி கிடையாது. பழகினாலும் எல்லைக்கு உட்பட்டுதான். அந்த எல்லையை மீறி காதல் என பரிமளித்தால் அதற்கும் எதிர்ப்பு. அந்த காதலும் ஆண்-பெண் பற்றிய அரை குறை புரிதலுடன்தான் இருக்கும். ஆக, கல்யாணத்துக்கு பிறகுதான் ஆணுக்கு பெண்ணுடனும் பெண்ணுக்கு ஆணுடனும் முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதாவது, கல்யாணத்துக்கு பிறகு உங்கள் அறைக்குள் முற்றிலும் புதிதாக, பழக்கமில்லாத விலங்கு இருக்கும். அது எப்படி செயல்படும் எங்கே கடிக்கும் எங்கே கொஞ்சும் என தெரியாது. மிச்ச வாழ்க்கையின் பெரும்பகுதி அதை அறிந்துகொள்வதில்தான் கழியும்.
ஆண் என்பவன் தான் சிந்திக்கும், செயல்படும் திறன் வழிதான் பெண்ணை புரிந்துகொள்ள முற்படுவான். பெண்ணும் அப்படியே. பெண்ணுக்கு ஆணின் உளச்செயல்பாடும் ஆணுக்கு பெண்ணின் உளச்செயல்பாடும் முற்றிலும் புது நிலப்பரப்புகள். குருடன் யானையை தடவி அறிந்துகொள்வது போலத்தான்.
ஆண் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை பற்றி மட்டும்தான் சிந்திக்க முடியும். பெண் அப்படி அல்ல. ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்க முடியும். ஏனெனில் ஆணுக்கு வேட்டை மனம். பெண்ணுக்கு பல காலம் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு, பல வேலைகள் ஒருங்கே செய்ய பணிக்கப்பட்ட மனம்.
வேட்டைக்கு செல்பவன் சிந்தனையெல்லாம் இலக்கை நோக்கி மட்டுமே இருக்கும். பெண்ணோ தான் வாழும் வீட்டை, அழும் குழந்தையை, தோட்டத்து செடிக்கு ஊற்ற வேண்டிய தண்ணீரை, புதிதாக வந்த அண்டை வீட்டாரை என சிந்திப்பதற்கு பல விஷயங்கள் task list-ல் கொண்டிருப்பாள்.
ஒரு ஆண் சும்மா அமர்ந்திருக்கிறான் என்றால் பெண்ணால் புரிந்துகொள்ள முடியாது. எப்படி ஒருவனால் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? மல்லாக்க படுத்து விட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது ஆணுக்கு மட்டும்தான் சாத்தியம். பெண்ணால் அப்படி இருக்க முடியாது. அவளது மூளை has been wired in such a way that she cannot remain calm and idle. (Ofcourse, வாசிப்பின் வழி சிந்தனையை, புரிதலை வளமாக்கிக் கொண்ட பெண்கள் இதில் சேர்த்தி இல்லை.)
ஆணுக்கு ஒரு விஷயத்தை செய்ய முயன்று தோற்றாலோ, அதில் சிக்கல் ஏற்பட்டாலோ அவ்வளவுதான். அதை சரியாக்குவது எப்படி என்பதை மட்டுமே பல நாட்களுக்கு யோசிக்கும் அளவுக்கு மங்குனி அவன். அந்த நேரத்தில் பால் வாங்கி வரச் சொல்வதோ, குழந்தைக்கு ஷு மாட்டி விட சொல்வதோ, ஏன் அவனையே சாப்பிட அழைப்பதோ கூட எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். அப்படி எரிச்சலடைந்து அவன் கத்துகையில், பெண்ணுக்கு புரியவே புரியாது. என்ன செய்துவிட்டோம் இப்படி இவன் கத்துவதற்கு என்றுதான் எண்ண தோன்றும்.
மறுபக்கத்தில், தன்னால் பல செயல்கள் செய்ய இயலுவதை போலவே ஆணும் செய்வான் என பெண் நம்புவாள். அதனால் எதிர்பார்ப்பாள். அப்படி கேட்கும்போது அவன் கத்துவதை தன் மீது கொண்ட பிணக்கு என எண்ணி நொக்குறுக ஆரம்பிப்பாள். ஏனெனில் அவளின் thinking pattern-ல் ஆணின் thinking pattern-க்கான clue கூட இல்லை. அதற்கான பயிற்றுவிப்பும் இல்லை.
கடலும் மலையும்தான் காதலிக்கின்றன. மணம் முடிக்கின்றன. உரசல் இல்லாமலா போகும்? போரே நடக்கும்! அதற்குள்ளும் ஊடாடும் மெல்லிய இழைதான் காதல்!
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!