murasoli thalayangam
ஒரு நாள் பெய்த மழைக்கே மக்களை காக்கத் தவறிய தவெக அரசு : அலுவலகத்துக்கு விஜய் வந்து பார்ப்பதால் என்ன பயன்?
முரசொலி தலையங்கம் (20-10-2026)
மக்களைக் காத்தது தி.மு.க. அரசு!
ஒரு நாள் பெய்த மழைக்கே மக்களைக் காக்கத் தவறியது த.வெ.க. அரசு. எந்த திட்டமிடுதலும் செய்யவில்லை. ஆனால் பெரு மழைக் காலங்களில் மக்களைக் காத்தது தி.மு.க. அரசு.
மழை பெய்யும் போது தண்ணீர் நிற்கும். மழை நின்றதும் தண்ணீர் வடிந்து விடும். அத்தகைய நிலைமையைச் சென்னையில் உருவாக்கி வைத்திருந்தது கழக அரசு. அதற்குக் காரணம் முன்கூட்டியே செய்த திட்டமிடல்கள் தான்.
மழை பெய்து சில மணி நேரத்தில் வெள்ளம் வடிந்து விடக் கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த தி.மு.க. அரசு செய்து வைத்திருந்தது. அதனால் எங்கும் மழை, வெள்ளம் தேங்கவில்லை.
சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது தி.மு.க ஆட்சியில். ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. சென்னைக்கு ஏற்படும் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள்கொடுத்த 161 ஆலோசனைகளில் 101 ஆலோசனைகள் ஏற்கப்பட்டு படிப்படியாக செய்து தரப்பட்டது.
சென்னையில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தொடர்ந்து தூர் வாரப்பட்டது. புறநகர் கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டன.
மிகப்பெரிய மழை பெய்தாலும் உடனடியாக நீர் வடிந்துவிடக் கூடிய அமைப்பை தி.மு.க. அரசு உருவாக்கியது. தி.மு.க. ஆட்சிக் காலத் திட்டமிடுதல்களை கண்காணித்து ஓராண்டு காலத்துக்குள் முடித்துவிட்டால் எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டு விடும்.
மேலும், மழை - வெள்ளக் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும் முன்னுதாரணமாகச் செய்து காட்டியது திராவிட மாடல் அரசு .
பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் அச்சமின்றி தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட உதவும் வகையிலும் அனைத்து ஏற்பாடுக- ளையும் தி.மு.க. அரசு செய்து தந்தது. அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்.
மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்திடும் நோக்கில் வெள்ள நிவாரண முகாம்கள் உடனடியாக அமைக்கப்படும். இந்த முகாம்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும். இதற்காக சமையல்கூடங்கள் தயார் நிலையில் இருக்கும். நிலையான மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தாழ்வானப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படும்.
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயாராக இருக்கும். காற்றில் விழும் மரங்களை அகற்றுவதற்காக மர அறுவை இயந்திரங்கள் தயாராக இருக்கும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் தொடர்ந்து பராமரிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் தேவைகளை உடனடியாகத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும். இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.
சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கும். தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசு சிறப்பு உத்தரவு களைப் போட்டு வைத்திருக் கும்.
இவை அனைத்தும் செய்து வைத்திருந்தால் அது தி.மு.க. அரசு. இவை எதுவம் செய்யாமல், கடந்த ஆட்சி மீது குறை சொல்லி ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தால் அது த.வெ.க. அரசு. ஆனால் இன்று என்ன நடக்கிறது?
முதலமைச்சரின் பெரம்பூர் தொகுதியில் மக்கள் குறைகளைக் கேட்க த.வெ.க. அரசில் யாருமில்லை, அந்தக் கட்சியிலும் யாருமில்லை. எந்த அமைச்சரும் வரவில்லை 'சாப்பிட்டீங்களா என்று எங்களைக் கேட்கக்கூட அரசாங்கத்தில் இருந்து யாரும் வரவில்லை' என்கிறார்கள் பொதுமக்கள்.
தொடர் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நான்கு மணி நேரம், ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லை. அதைக் கவனிப்பார் யாருமில்லை. மரங்கள் முறிந்து விழுகிறது. அப்புறப்படுத்த அரசு முயற்சிக்கவில்லை. சென்னை ராயபுரத்தில் ஏழு மணி நேரமாக மின்வெட்டு. மக்களே வீதிக்கு வந்து சாலை மறியல் செய்துள்ளார்கள். வேளச்சேரிக்கு அமைச்சர் குமார் என்பவர் வந்துள்ளார். (ஐந்து மாதம் கழித்து இப்பதான் உங்களைப் பார்க்கிறோம்’ என்று மக்கள் முற்றுகையிட்டுள்ளார்கள். புகார்சொல்ல வந்த பொதுமக்களை த.வெ.க. நிர்வாகிகள் விரட்டி அடித்துள்ளார்கள்.
மழை, வெள்ளக் காலங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற முன் திட்டமிடுதலே இல்லாமல், மழையன்று காலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு முதலமைச்சர் விஜய் வந்து பார்ப்பதால் என்ன பயன்?
ஒரு படத்தில், டிரைவர் தனது காரை பின்னால் ரிவர்ஸ் எடுப்பார். எடுக்கும் போது, ‘பின்னால் இடிக்குதா?' என்று பார்க்கச் சொல்வார். பின்னால் சுவரில் இடித்த பிறகு, 'இடிச்சிருச்சு' என்று சொல்வார். அதுபோல மழை பெய்யும் அன்று காலையில் வந்து வரப்போகும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
நாடு இன்னும் எத்தனை விதமான கொடுமைகளை எல்லாம் பார்க்கப் போகிறதோ?
Also Read
-
தவெக அரசின் தீண்டாமையா? தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் சமையலர் பணி இல்லை என பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
-
“ஓரிரவில் கனமழையால் தேங்கிய நீர், விடிவதற்குள் வடிந்தது! திமுக அரசின் சாதனை இது!”: கே.என்.நேரு பெருமிதம்!
-
“இது தமிழக வெற்றிக் கழகமா? அல்லது Drugs வெற்றிக் கழகமா?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சாராய ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மர்மம் என்ன? : முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு கேள்வி
-
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை! - தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை!