murasoli thalayangam
5 ஆண்டுகாலம் கருணை மிகு அரசு - கருணையின் வடிவம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!
கருணையின் வடிவம் முதல்வர்!
முரசொலி தலையங்கம் (05-03-2026)
மார்ச் - 3 ஆம் தேதி காலை வேளையை தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிமிகு நாளாக விடிய வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு வாட்டம் போக்கும் வகையில் 2 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதிய உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3, 200 ரூபாய் கிடைத்திருக்கிறது. 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 3, 500 ரூபாய் கிடைத்திருக்கிறது. பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் வழங்கி இருக்கிறார் முதலமைச்சர்.
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்- தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி- யும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவை அனைத்தும் மார்ச் 3 ஆம் தேதி காலையில் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த நல்ல செய்தி ஆகும். பிப்ரவரி 13 ஆம் தேதியன்று மக்கள் அடைந்த மகிழ்ச்சியே இன்னும் பொங்கி வழியும் நிலையில் அடுத்தடுத்த மகிழ்ச்சி அறிவிப்- புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள்.
பிப்ரவரி 13 ஆம் தேதியன்று காலையில் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாயை வழங்கினார் முதலமைச்சர். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3,000 ரூபாயைக் கொடுக்கச் சொன்னார். அத்தோடு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாயும் சேர்த்துக் கொடுத்தார். 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒரே நாளில் தமிழ்நாட்டு மகளிர் கையில் போய்ச்சேர்ந்தது.
1.31 கோடி மகளிர் இப்போது ஆயிரம் ரூபாயை மாதம் தோறும் உரிமைத் தொகையாகப் பெற்று வருகிறார்கள். "திராவிட மாடல் 2.8- ஆட்சியில் உரிமைத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்” என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர்.
5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் என்பதல்ல முக்கியம். இத்திட்டத்தை முடக்க நினைத்தவரின் சதியை முறியடித்து விட்டார் முதலமைச்சர். “ஐந்து மாநிலத் தேர்தல் வரப்போகிறது. எனவே இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும்' என்று பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த சதியை முறியடித்தார் முதலமைச்சர்.
•ரூ.5 ஆயிரம் வரவு வைத்தது
.ரூ.2 ஆயிரம் என வாக்குறுதி அளித்தது
•திட்டத்தை முடக்கும்சதியை முறியடித்தது.
- மூன்று ஆகப்பெரும் செயல்களைச் செய்து விட்டார் கருணைமிகு முதலமைச்சர் அவர்கள்.
இவை அனைத்தும் தேர்தலுக்காகச் செய்யப்படுபவை அல்ல. முதலமைச்சரின் கருணை உள்ளம் தான் இதற்குக் காரணம்.
கொரோனா காலத்தை நினைத்துப் பாருங்கள். கழக ஆட்சி அமைந்தபோது கொரோனா காலம் ஆகும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4,000 ரூபாயை இரண்டு தவணையாகத் தந்தார்
முதலமைச்சர் அவர்கள். இதனை 2.14 கோடி குடும்பங்கள் பெற்றார்கள்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலில் 2 ஆயிரம் ரூபாயும், அடுத்து 2 ஆயிரம் ரூபாயும் என 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. 13 விதமான மளிகைப் பொருள்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் கட்டணத்தை அரசே காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்றது. கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்ற குழந்தைகள் 18 வயதை அடையும் போது அந்தத் தொகை அதற்கான வட்டியுடன் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கப் போகிறது. இதுதான் மாண்புமிகு முதலமைச்சரின் உண்மையான கருணை உள்ளம் ஆகும்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்த ஐந்தாண்டு காலமும் அரசை, கருணை மிகு அரசாக நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
‘“தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!” என்று சூளுரைத்த முதலமைச்சர் அவர்கள், அதற்கு உதாரணமாகவே ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறார் கருணைமிகு முதலமைச்சர் அவர்கள்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!