murasoli thalayangam

செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் எழுப்பும் கேள்வி : பத­றும் ‘கொட­நாடு’ பழ­னி­சாமி - முரசொலி!

முரசொலி (12-11-2025)

பதறும் 'கொடநாடு' பழனிசாமி!

கொடநாடு விவகாரம் குறித்து செங்கோட்டையனும், டி.டி.வி.தினகரனும்அளித்துள்ள பேட்டிகள் ‘கொடநாடு' பழனி சாமியை பதற வைத்துள்ளது.

‘‘கொடநாடு விவகாரத்தில் பழனிசாமி தான் ஏ1. அம்மாவின் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்என்று பழனிசாமி ஏன் வலியுறுத்தவில்லை? சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் கேட்கவில்லை?” என்று கேள்விகளை அடுக்குகிறார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டியில், “கொடநாடு எஸ்டேட்டில் நகைகளோ, பணமோ, பொருட்களோ இருக்காது என்று தெரிந்தும் அங்கே கொலை, அதைத் தொடர்ந்து தற்கொலை நடந்துள்ளது. இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடந்துள்ளது. அன்றையகாலக்கட்டத்திலேயே அந்த கொலை வழக்கில் பல தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்தது. அம்மா ஜெயலலிதா அவர்கள் பலரையும் பற்றி விசாரிப்பார். அப்படி விசாரிக்கப்பட்ட தகவல்களை பச்சை கவரில் வைத்திருப்பார். இவர்களது லீலாவினோதங்கள் அதில் இருக்கும். இதை வைத்து அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார். அம்மா மறைவுக்குப் பிறகு எனது சித்தி சசிகலா அறிவுறுத்தலின் பேரில் கொடநாட்டில் உள்ள ஆவணங்களை நான் பார்த்தேன். அந்த ஆவணங்களில் சிலரைப் பற்றி வந்திருந்ததையும் பார்த்தேன். அ.தி.மு.க. காலத்து அமைச்சர்கள் பற்றிய கடிதங்கள் அதில் இருந்தன. இந்த கோப்புகளைத் தேடித்தான் கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்தன. இதனை நான் சொன்னால் எதற்காக பழனிசாமி பதறுகிறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத பழனிசாமி, 'கொடநாடு வழக்கை வைத்து என்னை யாரும் மிரட்ட முடியாது' என்கிறார். பழனிசாமியை யாரும் மிரட்டவில்லை. அவராக ஏன் மிரள்கிறார்?

இன்றைக்கு சட்டம் ஒழுங்கை வாய்கிழியப் பேசுகிறாரே பழனிசாமி, அவரது ஆட்சியில்தான் கொடநாடு சம்பவம் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் 24-ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழை கிறது. இந்த ஓம் பகதூர் மூச்சுத்திணறால் இறந்தே போகிறார். பங்களாவில் உள்ள மிக முக்கியக் கோப்புகளை திருடிச் சென்று உள்ளார்கள். இந்த 11 பேர் கும்பலில் பெரும்பா லானவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர்.

கொடநாடு பங்களாவில் சில சின்னச் சின்ன பொருள்கள்காணாமல்போனது. அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டது, கைப்பற்றிவிட்டோம்”என்று பழனிசாமி அரசு சொன்னது.

ஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.

இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியம் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார். இந்தச் சம்பவம் நடந்த 15-ஆவது நாள் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஐந்து பேர் மரணம் அடைந்த மர்மமான வழக்குத்தான் இந்த கொடநாடு வழக்கு.

ஜாமீனில் வெளியில் வந்த சயான் என்பவரும் வாளையார் மனோஜ் என்பவரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இறந்துபோனகனகராஜுக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இதில் தொடர்பு இருக்கிறதுஎன்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்கள்.

‘முதலமைச்சரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார்' என்று அவர்கள் சொன்னார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையார் மனோஜும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சஜீவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்தார்.

உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம், உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வக் கூட்டம், அரசுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது. அந்த நிலையில் சஜீவனுக்கு அ.தி.மு.க. மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பம் வழங்கினார் பழனிசாமி. இந்த நியமனத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினரே கோத்தகிரி எம்.ஜி.ஆர். சிலை முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

முதலமைச்சர் பழனிசாமி மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும்மனோஜும் சிறையில் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக அப்போது புகார் கூறினார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் இந்த விவகாரத்தில் பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று அப்போதே பேட்டி கொடுத்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி முடிவற்று, 2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 2021 ஆகஸ்ட் 17-ஆம் தேதியன்று, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் கூலிப்படையைச் செயல்படுத்தியதாகச் சொல்லப்படும் சயான் என்பவர் ஊட்டி காவல்துறையில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். மறுநாள் 18 ஆம் தேதியே கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்குள் வந்தார் பழனிசாமி. 'எனக்கு எதிராக சதி செய்கிறது தி.மு.க. அரசு' என்று சொல்லி வெளிநடப்ப செய்தார். 19-ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு ஓடினார். வெளியில் வந்து பேட்டி தருகிறார்.

"சயான் வழக்கு முடியம் தருவாயில் உள்ளது . இகை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். பழிவாங்க இதை ஜோடிக்கிறார்கள்” என்றுபதறினார் பழனிசாமி. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி பதறினாரோஅதே பதற்றத்துடன் தான் இப்போதும் இருக்கிறார் பழனிசாமி.

Also Read: “ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை உறுதி செய்யுங்கள்!” : S.I.R குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!