murasoli thalayangam
பழனிசாமியின் துரோக வரலாற்றை விவாதம் நடத்தித்தான் வெளிச்சம் போட வேண்டுமா? : முரசொலி!
முரசொலி தலையங்கம் (15-03-2025)
உண்மை மீது விவாதம் எதற்கு?
சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆன எடப்பாடி பழனிசாமி, அந்தப் பதவியைத் தக்க வைக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கினார், அதற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க.வுக்கு அடமானம் வைத்தார் என்பது ஊரறிந்த உண்மை ஆகும். இந்த உண்மைமீது விவாதம் நடத்த வேண்டுமா என்ன? ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதைப் போல, பழனிசாமியின் துரோக வரலாற்றை விவாதம் நடத்தித்தான் வெளிச்சம் போட வேண்டுமா?
பதவி பறிக்கப்பட்டுப் பரிதாபமாக நிற்கும் பழனிசாமி, 'தமிழ்நாட்டு மக்கள் பழசு அனைத்தையும் மறந்திருப்பார்கள்' என்று அதிகப்படியாகத் துள்ளிக் குதிக்கிறார். 'நான் எங்கே தமிழ்நாட்டை அடமானம் வைத்தேன்? நான் விவாதிக்கத் தயார்' என்று பழனிசாமி குதிப்பதும், அதற்கு, ‘ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட' ஜெயக்குமார் சாமரம் வீசுவதும் சகிக்கவில்லை.
ஜெயலலிதாவே எதிர்த்த ‘உதய் மின்' திட்டத்தில் கையெழுத்திட்டது யார்? 2816 வரையில் நடக்காத நீட் தேர்வை 2017- ஆம் ஆண்டிலிருந்து நடத்த அனுமதித்தது யார்? நாடாளுமன்றத்தில் சுரங்க, கனிமவள மசோதாவுக்கு ஆதரவு தெரி- வித்த அடிமைக் கட்சி எது? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து, சட்டம் வர காரணமாக இருந்தது யார்? முத்தலாக் சட்டத்தை ஆதரித்துப் பேசியது யாருடைய நாக்கு? - இப்படி தொடர் துரோகம் கொண்டதுதான் பழனிசாமியின் வரலாறு.
இந்தியாவில் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த ஒரே கட்சித் தலைவர் பழனிசாமிதான். ‘மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக விவாதம் நடத்தத் தயார்' என்று சவடால் விட்டவர்தான் பழனிசாமி. டெல்லியில் போராடும் விவ- சாயிகளை ‘புரோக்கர்கள்' என்ற புரோக்கர்தான் பழனிசாமி.
குடியுரிமைதிருத்தச் சட்டமே அ.தி.மு.க. வாக்களித்ததால்தான் நிறைவேறியது. 'எந்த முஸ்லிம் பாதிக்கப்பட்டார்? காட்டுங்கள்' என்று வாய்ச்சவடால் விட்டவர் அவர்தான்.
இப்போதுகூட, தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை பழனிசாமி கண்டித்தாரா? அது யாருடைய நிதி? தி.மு.க.விற்கு வர வேண்டிய நிதியா? நம் மாணவர்களின் கல்வி நிதிதானே! நியாய- மாக எதிர்க்கட்சித் தலைவராக என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்றிய அரசின் செயலைக் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். எதிர்த்தாரா பழனிசாமி?
‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி தருவோம்' எனப் பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார். பழனிசாமி கோபப்பட்டுப் பொங்கி எழுந்து ஒன்றிய கல்வி அமைச்சரைக் கண்டித்தாரா? தமிழர்களை ‘நாகரிகமற்றவர்கள்' என அவமதித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தி.மு.க. தீரத்தோடு எதிர்த்தது. பழனிசாமி 'ரெய்டு' பயத்தோடு பதுங்கினார்!
‘அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?' எனப் பாடினார் எம்.ஜி.ஆர். கோழை பழனிசாமியின் உடம்பில் ஓடியது அடிமை ரத்தம்தானே!
மக்களாட்சியை ஒழித்து, சர்வாதிகார அதிபர் ஆட்சியைக் கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க.வின் மறைமுகச் சதித்திட்டம்தான் ஒரே நாடு -ஒரே தேர்தல். இந்தத் திட்டத்தை முதன்முறையாக மோடி அரசு கொண்டு வர முயன்ற போது, அம்மையார் ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார். 2915-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அ.தி.மு.க. அறிக்கையே வழங்கியது. அதன்பிறகு பழனிசாமி அவர்கள் ஆட்- சியில் அமர்ந்த போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மீண்டும் கொண்டுவர முயன்றார் பிரதமர் மோடி. இதை 2018 ஆம் ஆண்டு எதிர்த்தார் பழனிசாமி.
2021 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நடந்தால் தனது பதவி முன்கூட்டியே போய்விடும் என்று பயந்தார் பழனிசாமி.
2018 ஜூலை 7 மற்றும் 8 தேதிகளில் டெல்லியில், நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகளும் 59 மாநில கட்சிகளும் பங்கேற்றன. அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும் சி.வி. சண்முகமும் கலந்து கொண்- டார்கள். அந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்' திட்டத்திற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 2018 ஜூன் 29-ஆம் தேதி சட்ட ஆணையத்திற்கு அன்றைக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கி- ணைப்பாளராகவும் இருந்த பன்னீர் செல்வமும் பழனிசாமியும் சேர்ந்து கடிதம் எழுதினார்கள். அதில், 'ஒரேநாடு- ஒரே தேர்தலுக்கு' எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தைக் குறைக்கும் வகை - யில் எந்த மாற்றமும் கொண்டுவரக் கூடாது எனவும் சொன்னார்கள். அவர்களுடைய ஆட்சிக்கு எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு அப்படியே பல்டி அடித்தார் பழனிசாமி. ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.
பழனிசாமிக்குப் பதவி கொடுத்தது சசிகலாதான் என்பது ஊரறிந்த உண்மை. ‘நீ ஏன் கட்சியைச் சொந்தம் கொண்டாடுகிறாய்? நீ எனக்குப் பதவி கொடுத்தியா?' என்று கேட்ட துரோகி தான் பழனிசாமி. இந்தத் துரோகப் படலத்தை எல்லாம் பட்டிமன்றம் வைத்துத் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா?
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!