murasoli thalayangam
”தமிழை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
முரசொலி தலையங்கம் (22-01-2025)
தமிழ் உலகு
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத -எந்த இந்திய மொழிகளிலும் நடக்காத - பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. பள்ளிக் கல்வித் துறையின் தனித்துவமான முயற்சியால் இது நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பை உருவாக்கித் தந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.
"உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும்” (Bringing the world to Tami1; Taking Tami1 to the Wor1d) என்ற உன்னதமான நோக்கத்தோடு பன்னாட்டு புத்தகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு 24 நாடுகள் பங்கெடுத்தன. 2824 ஆம் ஆண்டு 40 நாடுகள் பங்கெடுத்தன. இந்த ஆண்டு 60 நாடுகள் பங்கெடுத்துள்ளன. அதிலும் 34 நாடுகள் முதன்முதலாக பங்கெடுத்துள்ளன.
2023 ஆம் ஆண்டில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2024 ஆம் ஆண்டில் 752 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தமிழில் இருந்து அயலக மொழிகளுக்கு 1005, அயலக மொழிகளில் இருந்து தமிழுக்கு 129 என ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக அரபிக் மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்ச் மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
‘“இந்தச் சாதனைக்கும், தமிழிலக்கியம் உலக அளவில் கவனம் பெறவும் நமது திராவிட மாடல் அரசின் மொழிபெயர்ப்பு நல்கையும் ஆதரவும்தான் காரணம் எனத் தமிழ் அறிவுலகம் பாராட்டுகிறது. ஞானபீடம் அல்ல, நம் எழுத்தாளர்கள் நோபல் பரிசே பெற உயர்வுள்ளுவோம்! இவ்வியத்தகு சாதனைக்காக மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!" என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மனந்திறந்து பாராட்டி இருக்கிறார்கள்.
உலகெங்கும் தமிழ் இலக்கியங்களை எடுத்துச்சென்று, தமிழ் மொழியின் சிறப்பினை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இதன் மூலம், கடந்த இரண்டாண்டுகளில், 166 தமிழ் நூல்கள் 32 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற பதிப்பகங்கள் இந்த நூல்களை வெளியிடுகின்றன. தமிழ் இலக்கியங்- களை தமிழ்நாட்டு வரலாற்றை தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழி மொழிபெயர்ப்புகள் வாயிலாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பணியினை சிறப்பாகச் செய்து வருகிறது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
உலகளாவிய விருதுகளையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தக கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த விருதுகளைப் பெற்றார்கள்.
பன்னாட்டு புத்தகத் திருவிழாவின் மகத்தான சாதனை என்பது என்ன என்பதை பதிப்பாளர் ஆழி செந்தில் நாதன் முழுமையாகப் பட்டியலிட்டுள்ளார்.
‘“ பன்னாட்டுக் காட்சிகளில் வழக்கமாக எப்போதும் காணப்படும் முகங்களோடு, பல புதிய முகங்கள் என அற்புதமாக இருந்தது அனுபவம். இந்த முறை ஆப்பிரிக்க நாடுகள் பலவும் அழைக்கப்பட்டிருந்தன. கானா, பெனின், எத்தியோப்பியா என பல நாடுகளின் ‘தெற்கு நாடுகளின்' தாக்கம் அதிகமாகவே இருந்தது. முதல் ஆண்டில் 28+ நாடுகள், இரண்டாம் ஆண்டில் 49 + நாடுகள், மூன்றாம் ஆண்டில் 68+ நாடுகள்.
புதுதில்லி உலகப் புத்தகக் காட்சியும் கொல்கத்தா பன்னாட்டுப் புத்தகக் காட்சியும் பல பதிற்றாண்டுகளாக காணாத வளர்ச்சியை மூன்றாவது ஆண்டிலேயே நாம் கண்டிருக்கிறோம். கடந்த இரண்டாண்டுகளாக நாம் ஆழ உழுதிருக்கிறோம். பயிர் அழகாக வளர்ந்துகொண்டிருக்கிறது.
தமிழ்ப் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் இணைந்து பரபரப்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் காட்சிகளைப் பார்க்கும்போது எல்லாவற்றையும் மறந்து நமது மனமும் உற்சாகம் கொள்கிறது. தமிழ்நாடு வெல்கிறது. நமது உழைப்பு வீண்போகவில்லை என்கிற உணர்வு தெம்பளிக்கிறது.
சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகள் என நீங்கள் ஒரு பெரும் பட்டியலைத் தொடுக்கமுடியும். அதில் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி முக்கியமான இடம் பெறும். அவரது ஆட்சிக் காலத்தில், வர்த்தகத்துக்கு அப்பால், முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய சர்வதேச உறவாடல் இதுதான். அதன் பொருள் ஆழமானது. பண்டைத் தமிழரின் உலக உறவுகளை மீட்டமைப்பது" என்று எழுதி இருக்கிறார் அவர்.
தமிழ்நாடு இதுவரை பார்க்காத காட்சியைப் பார்க்க வைத்துள்ளார். முதலமைச்சர் அவர்கள். தமிழ் உலகு என்று இதுவரை சொல்லி வந்தோம். உண்மையில் தமிழை உலகமெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
வாழ்க தமிழ்!
வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர்!
அவரைத் தமிழும் வாழ்த்தும்!
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!