murasoli thalayangam

”முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொய்ப்பன்னீர் தெளிக்கும் ஓ.பன்னீர்” - முரசொலி நாளேடு சரமாரி தாக்கு!

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தி.மு.க. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து மாவட்டங்களில் போராட்டம் நடத்தப் போவதாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சொல்லி இருக்கிறார்!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அ.தி.மு.க.விலேயே ஒரு அணி, போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறது. அது ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியுமா? இப்படி சொந்தக் கட்சிக்காரர்களால் உதாசீனப்படுத்தப்படும் அளவுக்கு சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தக்க வைப்பதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ ஏதாவது ஒரு அறிக்கையை நித்தமும் விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஓ.பன்னீர்.

அந்த வரிசையில் முல்லைப் பெரியாறு அணை மீது பொய்ப்பன்னீர் தெளித்துக் கொண்டு இருக்கிறார் ஓ.பன்னீர்! முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கதி.மு.க. அரசு தவறிவிட்டதாம். அதன் உரிமையை அம்மையார் ஜெயலலிதாதான் பெற்றுத் தந்தாராம். இன்றைய கேரள அரசு பல்வேறு இடையூறுகளைச்செய்து வருவதை தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறதாம்.அதனால் ஐந்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப் போகிறாராம்.பன்னீர்செல்வம் சொல்லும் முல்லைப் பெரியாறு வரலாறு இதுதான்.

முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு என்பது ஜெயலலிதாவுக்கும்முந்தியது. பன்னீர்செல்வத்துக்கும் தெரியாதது.முல்லைப் பெரியாறு அணையைக் குறித்த வதந்திகளைத் தொடர்ந்துபரப்பி வருவது கேரள ஊடகங்கள் சிலவற்றின் வழக்கமான வேலையாகஇருந்து வருகிறது. அணை உடையப் போகிறது, தண்ணீரை முழுஅளவுக்குத் தேக்கக் கூடாது, புது அணை கட்ட வேண்டும் என்றுதொடர்ந்து ஏதாவது ஒரு செய்தியை அவர்கள் பரப்புவார்கள். 1979 ஆம்ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒன்றிய நீர்ஆணைய அதிகாரிகள் சிலர், அணையின் நீர் மட்டம் குறைக்கப்படவேண்டும் என்று அறிக்கைகள் கொடுத்தார்கள். இதனைத் தொடர்ந்துபெரியாறு அணையின் நீர் 152 அடியில் இருந்து 142 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் 136 அடியாகவும் குறைக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள்செய்யப்பட்டன.இந்தப் பணிகள் முடிந்த பிறகும் 142 அடியாக உயர்த்த கேரளா அனுமதிக்கவில்லை. 142 அடியாக உயர்த்த அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில்நீதிமன்றத்தை நாடினோம். 27.2.2006 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்ததீர்ப்பின்படி, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்.

அணையைபலப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடிவரைக்கும் தேக்கலாம். இந்தத் தீர்ப்புக்கு எதிரான ஒரு சட்டத்தை கேரளாநிறைவேற்றியது. அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் நாம் போனோம்.அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள்நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதிஆணையம் அமைக்கப்பட்டது.

2012 ஏப்ரல் 25 ஆம் தேதி அவர்கள் அறிக்கைகொடுத்தார்கள். அணை பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர்கள்சொல்லி விட்டார்கள். நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூட அதனால் எந்தபாதிப்பும் வராது என்று சொல்லி விட்டார்கள். 2013 ஆகஸ்ட் 13 வரை விசாரணைஉச்சநீதிமன்றத்தில் நடந்தது. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசனஅமர்வானது 142 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றுதீர்ப்பு அளித்துள்ளது. 2014 மே 7 ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வந்தது.தீர்ப்பு வாங்கியதை அ.தி.மு.க.வின் சாதனையாக பன்னீர்செல்வம்சொல்கிறார். அதன் பிறகு அடைந்த பின்னடைவுகள் அவருக்குத் தெரியாதா?2014 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் புதியஅணைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை கேரளா கேட்டது, கேட்டுப் பெற்றது.

முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கானசுற்றுச்சூழல் அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய சுற்றுச்சூழல்அமைச்சகம் அனுமதி தந்திருப்பது அ.தி.மு.க. ஆட்சியின் போதுதான்நடந்தது. (2018 செப்டம்பர் 27) எனவே, உரிமையை நிலைநாட்டி ‘முடித்துவிட்டோம்' என்று பன்னீர் பெருநிம்மதி அடைய முடியாது.இப்போதும் முல்லைப் பெரியாறு பிரச்சினை தலை தூக்கியதும் கேரளமுதல்வருக்கு தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரிவான கடிதம்எழுதி உள்ளார்கள். அதிகப்படியான மழையை வைத்து, கேரளாவில் கிளம்பிஉள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்த கடிதம் உள்ளது.

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள, நிர்ணயிக்கப்பட்ட மாத வாரியானஅணையின் நீர் மட்ட அட்டவணைப் படி தமிழ்நாடு அரசின் நீர்வளஆதாரத் துறை அணையினை கவனமாக இயக்கி வருகிறது. இதற்குப்புறம்பாக வரும் எந்தத் தகவலும் உண்மையானவை அல்ல" என்று நீர்வளஅமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார். "முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.சில ஊடகங்கள் அது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதைப் போன்றதோற்றத்தை உருவாக்க நினைக்கின்றன.

28.10.2021 அன்று தமிழகநீர்வளத்துறை பொறியாளர்களால்தான் மதகு திறக்கப் பட்டது. அப்போது கேரள அமைச்சரும், அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் ஒருவர் வழக்குப் போட்டதால் அவர்கள் வந்திருந்தார்கள். இதை வைத்து கேரள அதிகாரிகள் திறந்தார்கள் என்றுசொல்வது தவறானது"" என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்தெளிவுபடுத்தி விட்டார். இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளாமல் பன்னீர் செல்வம் பேசிவருவது குழப்பம் ஏற்படுத்தவே! தன்னுடைய அரசியலைத் தக்க வைக்கவே!அ.தி.மு.க.வில் இப்போது நடக்கும் குழப்பங்களை மறைக்கவே! தானும் ஒருஆள் என்பதைக் காட்டவே! பழனிச்சாமியை விட தான் பெரிய ஆள் என்பதைபழனிச்சாமிக்கு உணர்த்தவே!

Also Read: “முல்லை பெரியாறு தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது”:தவறான செய்தி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!