murasoli thalayangam
“பிரச்னைகளை திசைதிருப்பி, சட்டம் ஒழுங்கைக் கெடுக்கவே குடியுரிமை சட்டம்” - முரசொலி தலையங்கம்
“இந்தியாவை ஆளும் அரசுக்கு ஓராயிரம் சிக்கல்கள் இருக்கின்றன. வாய்க்கு வந்தபடி கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாட்டின் பொருளாதாரம் தரைதட்டி நிற்கிறது. அவர்கள் பொருளாதாரம் பற்றிப் பேச மறுப்பதே பொருளாதாரம் இருக்கும் லட்சணத்தை உணர்த்தும்.
370-வது சட்டத்தை நீக்கிவிட்டால் காஷ்மீர் அமைதியாகிவிய்டும் என்றார்கள். ஒரு மாநிலமே பல மாதங்களாக சிறைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது. அமைதி என்பதற்கு அர்த்தம் மயான அமைதி போலும்!
ஆட்சியில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்ப குடியுரிமைச் சட்டத்தை கையிலெடுத்து நிறைவேற்றியிருக்கிறார்கள். இச்சட்டத்தை அறிமுக நிலையிலேயே எதிர்த்தது தி.மு.க. எல்லா மதத்தவரும் வரலாம் என்றால் இஸ்லாமியர் விடுபட்டது ஏன்? எல்லா நாட்டவரும் வரலாம் என்றால் இலங்கை விடுபட்டது ஏன்? என்பதுதான் தி.மு.க-வின் கேள்வி.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாமும், டெல்லியும், மேற்கு வங்கமும் அனலாகத் தகிக்கிறது. அதலபாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரம் குறித்த பேச்சுகளை திசைதிருப்பவே இதுபோன்ற தந்திரங்களை பா.ஜ.க கையாள்கிறது” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.
Also Read
-
“விஜயால் முருங்கைக்காய் மட்டும்தான் பறிக்க முடியும்” : ஆர்.எஸ்.பாரதி விளாசல்!
-
“குதிரைபேரத்தில் விஜய் A1 குற்றவாளி” : தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் பேட்டி!
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!