murasoli thalayangam
மனசாட்சி இல்லாமல் ‘கூட்டாட்சியின் ஆன்மா’ பற்றி பேசும் மோடி! - முரசொலி தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவையின் 250-வது சிறப்புக் கூட்டத்தில் பெருமித உரையாற்றினார். அதில் ‘கூட்டாட்சி அமைப்பின் ஆன்மா மாநிலங்களவை’ என்று கூறியிருக்கிறார். பொழுது விடிந்தால் பா.ஜ.க அரசு இன்று என்ன சொல்லப்போகிறதோ, செய்யப் போகிறதோ என்கிற அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்திருக்கும் பா.ஜ.க பிரதமர்தான் கூட்டாட்சியைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
உண்மையச் சொன்னால் நம் நாட்டில் நடப்பது கூட்டாட்சியுமில்லை, ஒற்றையாட்சியுமில்லை. இரண்டும் உள்ள புதிய கலவையாக செயல்பாட்டில் இருப்பதால்தான் பல குழப்பங்கள் நாட்டில் மலிந்து காணப்படுகின்றன என முரசொலி கூறியுள்ளது.
கூட்டாட்சியின் ஆன்மா உண்மையிலேயே மாநிலங்களவையில் இருக்குமானால் காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டிருக்குமா? அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கப்பட்டதுதான் கூட்டாட்சியின் மாண்பா? பா.ஜ.க பிரதமர் மோடி கூறியிருக்கும் கூட்டாட்சியின் ‘ஆன்மா’வை நாம் பேரண்டத்தில் தேட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?