murasoli thalayangam
அவசர அவசரமாக ஆளுநர் ஆட்சி அமைத்ததற்கு காரணம் இதுதான்! - முரசொலி தலையங்கம்
மகாராஷ்டிரா அரசியல் நிலைமைகளைப் பார்த்து மாட்சிமை தாங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா ஒரு உபதேசம் செய்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது பா.ஜ.க-வின் கடந்தகால வரலாற்றை மறந்துவிட்டார் என்றே தெரிகிறது. மாநிலங்களில் செல்வாக்குடைய கட்சிகளின் கூட்டணியில் இருந்துவிட்டால் நாடு முழுவதும் காவிக்கு சொந்தமாகிவிட்டது என்ற நினைப்பு பா.ஜ.க-விற்கு.
கர்நாடகாவில்தான் கழுத்தறுப்பை சமீபத்தில் பார்த்தோம். எதிரணியுடன் சேர்ந்து சிவசேனா பா.ஜ.க-வின் செல்வாக்கை சரியச்செய்ததையும் பார்த்தோம். திருவள்ளுவருக்கு காவி வேட்டியைக் கட்டிவிட்டது போல செல்வாக்கான சக்திகளோடு சேர்ந்து காவிக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பின்வாசல் வழியே மாநிலங்களை பிடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க அமைச்சர் அமித்ஷாதான் பெரும்பான்மை இருந்தால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையுங்கள் என உபதேசம் கூறுகிறார். இந்த உபதேசத்தின்படி முதலில் நீங்கள் நடக்கப் பாருங்கள், பிறகு அடுத்தவர்களுக்குச் சொல்லலாம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தேசத்தை காக்க தி.க, தி.மு.க தான் மருந்து” : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் ஆ.ராசா.எம்.பி பேச்சு!
-
இனி பழைய பொருட்களை அகற்ற கவலை வேண்டாம் : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம்!
-
துன்பம் வரும்போது நம்மைக் காப்பவர் யார்? கைவிடுவோர் யார்? : மக்களுக்கு உணர்த்திய கரூர் துயரம்!
-
கரூர் துயர சம்பவம் : அவதூறு பரப்பிய Youtuber மாரிதாஸ்... கைது செய்த போலீஸ்!