murasoli thalayangam

ஹவ்டி மோடியா? அடியோஸ் மோடியா? - முரசொலி தலையங்கம்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலைமையில், ஹஸ்டன் நகரில் நடைபெற்ற ‘மோடி நலமா?’ நிகழ்ச்சி பல ஊடகங்களிலும், நாளேடுகளிலும் பேசப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சியை ஏற்காத அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஒரு பகுதியினர், ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தின் வெளியே ‘அடியோஸ் மோடி’ அதாவது ‘போய் வாருங்கள் மோடி’ என எதிர் முழக்கமிட்டிருக்கின்றனர். பிரதமர் மோடிக்கு எழுந்த இந்த எதிர்ப்பை இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் மறைத்துவிட்டன, அந்த அளவிற்கு இங்கே ஊடக தர்மம் போற்றப்பட்டு வருகிறது.

மோடி நலமாக இருக்கிறார், மோடிக்கு வேண்டப்பட்டவர்களாகிய அம்பானி, அதானி போன்றவர்கள் நலமே. ஏனெனில் நாட்டின் 1% உள்ள செல்வந்தர்கள் 60% மக்களின் வளத்தை சுருட்டி வைத்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி, வேலைவாய்ப்புகளை இழந்து, வாழ்வாதாரம் இன்றி தங்கள் உரிமை, சுதந்திரத்தை இழந்தவர்கள் பெரும்பான்மை மக்களே. அமெரிக்க நிகழ்ச்சியில் ‘இந்தியாவில் எல்லோரும் நலமே’ என்று பிரதமர் மோடி கூறியிருப்பது எந்த அளவுக்கு நமது நாட்டில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது என முரசொலி பட்டியலிட்டு கூறியுள்ளது.