Politics
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு காணொளி.. தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் நிலை! - முழு விவரம்!
தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, முடங்கிப்போன நிர்வாகம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தவெக அரசிற்கு எதிராக திமுக மகளிர் அணி சார்பில் நாளை (அக்.31) அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில்,
வணக்கம்!
எல்லாரும் நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு தான் நான் பேசுவேன்.
இப்ப தமிழ்நாடு இருக்குற நிலைமையைப் பார்த்து நான் இப்படி கேட்டேன்னா, “என்ன கிண்டல் பண்றீங்களா?”-ன்னு நீங்களே என்னை திருப்பிக் கேட்பீங்க...
தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பெண்கள், குழந்தைகளுக்கு
பாதுகாப்பு இல்லாத நிலை.. வரலாறு காணாத விலைவாசி உயர்வு
இவற்றை கண்டிச்சு, வர்ற அக்டோபர் 31-ஆம் நாள் சனிக்கிழமை – தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்கள்ல தி.மு.க. மகளிரணி சார்புல,
ஆர்ப்பாட்டம் நடைபெற போகுது!
அதை முன்னிட்டு சில கருத்துகளை ஷேர் பண்ணிக்கதான் இந்த வீடியோ!
சினிமாவுல ஹீரோவா இருந்தவர் நிஜத்துலயும் அப்படித்தான் இருப்பார்னு நினைச்சு, சில லட்சம் பேர் செஞ்ச தவறு ஒட்டுமொத்த மக்களையும் இப்ப பாதிச்சிட்டு இருக்கு.
த.வெ.க. ஆட்சி அமையுறதுக்கு முன்னாடி அந்த கட்சி தலைவர் - இன்றைய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், எல்லா கூட்டங்கள்லயும் என்ன பேசுனார்?
தமிழ்நாட்டோட சட்டம் ஒழுங்கு சரி இல்ல. குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல. போதைபொருட்களால குற்றங்கள் நடக்குது. இதை மட்டும்தான் தொடர்ந்து பேசி, ஆட்சிக்கு வந்தார்.
நீங்களே பாருங்க! ஆனா இன்னைக்கு என்ன நிலைமை?
பட்டப் பகல்ல முக்கிய சாலைகள்ல கொடூர கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீட்டுல தனியா வசிக்குற முதியோர்களை கொலை செஞ்சு நகைகள் கொள்ளையடிக்குறது - எல்லாமே சர்வசாதாரணமா நடக்குது.
சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போறாங்க. குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட இந்த அரசு மேல பயம் இல்ல. கிரிமினல்கள் இதை அவங்களுக்கான ஆட்சியா கொண்டாடுறாங்க. தலைநகரான சென்னையிலயே மயிலாப்பூர், அடையாறு, தரமணி-னு மிக மிக முக்கியமான பகுதிகள்ல கொலைகள் நடக்குது.
ஜாமின்ல வெளிய வர்ற குற்றவாளிகள் காவல் நிலையத்துல கையெழுத்து போட்டுட்டு வர்ற வழியிலயே அரிவாளால ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுறாங்க. நீதிமன்ற வளாகம் எதிர்லயே வெட்டி கொலை செய்யப்படுறாங்க.
பல மாவட்டங்கள்ல இரட்டை கொலைகளா நடக்குது. கொன்னுட்டு இன்ஸ்டாகிராம்ல ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க! புழல் சிறைச்சாலையில இருந்தே கைதிகள் தப்பிச்சு போறாங்க. தேனி மாவட்ட சிறைச்சாலையில இருந்து ஒரே இரவுல 17 பேர் மெயின் கேட்டை திறந்து சாவகாசமா தப்பிக்குறாங்க. நடுரோட்டுல கொலை செஞ்சிட்டு, எந்த பதட்டமும் இல்லாம பைக், ஆட்டோல ஏறி குற்றவாளிகள் போறாங்க.
இந்த காட்சிகளை எல்லாம் முதலமைச்சர் பார்க்குறாரா, இல்லையானு கூட நமக்கு தெரியல. இந்த செய்திகள் அவர் காதுக்கு போகுதான்னே சந்தேகமா இருக்கு. ஏன்னா, தமிழ்நாட்டுல இப்படி எதுவுமே நடக்காத மாதிரிதான் அவரோட செயல்பாடுகள் இருக்கு.
எல்லா கட்சிகளும் அறிக்கை விடுறாங்க. கண்டனம் தெரிவிக்குறாங்க. போராட்டம் நடத்துறாங்க. ஆனா, முதலமைச்சர் கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்ல. இன்னும் சினிமா ஷூட்டிங் டைம்ல கேரவன்ல போயி மணிக்கணக்குல உக்காந்துக்குற மாதிரியே யாராலயும் அணுக முடியாம இருக்காரு.
உள்துறைக்கு முதலமைச்சர்தான பொறுப்பு? அவர் பதில் சொல்லணுமா இல்லையா? அதிகாரிகளோட ஆய்வுக்கூட்டம் நடத்தி உரிய ஆர்டர் போடணுமா வேணாமா? ஆனா, இது எதுவுமே நடக்குறதில்ல. எல்லா துறைகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள்தான் பதில் சொல்றாங்க. அந்த பதிலும் பொறுப்பற்ற பதில்களா இருக்கு.
ஆட்சிக்கு வந்து 6 மாசம் ஆக போற நிலையிலயும் எல்லாத்துக்கும் திமுக திமுக-னு சொல்லுறதுதான் இவங்க கிட்ட இருக்க ஒரே பதில். இதுல ரொம்ப கவலைக்குரிய விஷயம் என்னனா, பாதிக்கு பாதி குற்றச் சம்பவங்கள்ல த.வெ.க. கட்சிக்காரங்கதான் சம்பந்தப்பட்டு இருக்காங்க.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கயும் போக தேவையில்ல. தன்னோட கட்சில இருக்கிறவங்கள கட்டுப்படுத்துனாலே குற்றங்கள் பெருமளவுல குறையும். அதாவது, பெண்களை த.வெ.க. காப்பாத்த வேணாம்!
த.வெ.க. கிட்ட இருந்துதான் பெண்களை காப்பாத்த வேண்டிய நிலை இருக்கு. பொதுவா, எல்லா கட்சியிலயும் ஒரு சில களைகள் இருக்கலாம்.
ஆனா, களைகள் எல்லாம் ஒட்டுமொத்தமா போய் சேர்ந்திருக்கிற கட்சியா இந்த த.வெ.க. இருக்கு!
அதுலயும், மெத் பூபாலன் என்ற ஒருத்தர் சில நாள் முன்ன ஒன்றிய அரசோட D.R.I. அமைப்பு கிட்ட மாட்டி இருக்கார். தமிழ்நாட்டை போதை உற்பத்தி மையமா மாத்தி, உலகம் முழுக்க மெத் சப்ளை பண்றதுதான் இவரோட வேலை. இவர் ஒரு த.வெ.க. நிர்வாகி!
ஆனா, இந்த செய்திய வெளியிட்டா கொன்னுடுவோம்னு த.வெ.க. ஒன்றிய செயலாளர் பத்திரிகைகாரங்களுக்கு ஃபோன் போட்டு மிரட்டுறார். இதுதான் தூய சக்தியா?
த.வெ.க. நிர்வாகியான மெத் பூபாலன் போதைப் பொருள் உற்பத்தி மூலமா சம்பாதிச்ச பணம்தான, நாகை மாவட்டத்துலயும் பிற மாவட்டங்கள்லயும் த.வெ.க.வோட தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும்? அதனாலதான் பத்திரிகைகாரங்களை மிரட்டுறாங்களா? இதையெல்லாம் முறையா விசாரிக்க வேண்டாமா?
சட்டம் ஒழுங்கு சீர்கேடு மட்டுமில்லாம, வரலாற்றுல இல்லாத அளவுக்கு விலைவாசியும் உயர்ந்து மக்கள் கஷ்டப்படுறாங்க. ரேஷன் கடையில சன்ன ரக அரிசி போடுறோம்னு சொல்லி, ரேஷன் அரிசிக்கு பாலிஷ் போட்டு ஏமாத்துறாங்க. நியாய விலை கடையில மலிவு விலை வெங்காயம் விற்பனைனு ஏமாத்துறாங்க.
ஆனா, கடைக்கு போனா அங்க வெங்காயமே ‘ஸ்டாக்’ இருக்குறது இல்ல. மக்களோட அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால பாதிக்கப்பட்டு இருக்கு. தங்கம் வாங்க முடியுமானு ஏழை மக்கள் ஏங்குன காலம் போயி, அரிசியே வாங்க முடியுமானு ஏங்குறாங்க!
தி.மு.க. ஆட்சியில இந்தியாலயே பணவீக்கம் குறைவா இருக்குற மாநிலமா தமிழ்நாட்டை வெச்சிருந்தோம். ஆனா, இப்ப இருக்க ஆட்சியாளர்களுக்கு எந்த துறையிலயும் நிர்வாக திறன் இல்ல. நிர்வாகம்னே என்னனே தெரியாத ஒரு மூடர் கூட்டத்தின் ஆட்சிதான் இன்னைக்கு தமிழ்நாட்டுல நடந்துட்டு இருக்கு.
இந்த TVK கவர்மென்ட், சொந்த புத்தியும் இல்லாத - சொல் புத்தியும் இல்லாத - ’சோப்ளாங்கி’ கவர்மென்ட்! இந்தியாலயே எந்த மாநிலமும் வாங்காத அதிக விலையா 37 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குறாங்க! காரணம் எந்த திட்டமிடலும் தொலைநோக்கும் இல்ல! இப்ப அதுல இருந்து டைவர்ட் பண்றதுக்காக என்ன பண்றாங்க? 41 ரூபாய்க்கு கரண்ட் வாங்க போறதா செய்திய வெளியிட்டு U Turn அடிச்சிட்டாங்க.
ஒரு கோடு பக்கத்துல அதை விட பெருசா இன்னொரு கோடு போட்டா, தானாவே அந்த கோடு சின்ன கோடா ஆகிடும்! அதுமாதிரி, 37 ரூபாய குறைவா காமிக்கணும்னு, இந்த 41 ரூபாய் நாடகத்த அரங்கேற்றி இருக்காங்க.
மக்களை பாதிக்குற இந்த பிரச்சினைகளை எல்லாம் நாம பேசுனா, ஒரு நல்ல அரசு அதை சரிசெய்ய பார்க்கணும். ஆனா, இவங்க என்ன பண்றாங்க தெரியுமா? இவங்களோட ஐ.டி.விங்ல இருக்க Online Abuser கூட்டத்த வெச்சு டூல்கிட் ஆக்டிவேஷன் பண்றாங்க! எந்த கட்சி மக்கள் பிரச்சினைய பேசுனாலும் அந்த பதிவுகளுக்கு கீழ அவங்களை திட்டி கமெண்ட்ஸ் போட வெச்சாலே போதும்னு இருக்காங்க.
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டினு முதலமைச்சர் சொல்றாரே! உண்மையில எந்த ரெண்டுக்கு இடையில போட்டி இருக்கு?
மின்வெட்டு, அரிவாள் வெட்டு! கரண்ட் பில், மளிகை பில்! விலை உயர்வு, கொலை உயர்வு! இதுதான் தமிழ்நாட்டோட யதார்த்தம்!
அண்ணனா இருப்பேன், மாமாவா இருப்பேன், சித்தப்பா பெரியப்பாவா இருப்பேன்னு டயலாக் விட்டாரே! முதல்ல அவர் முதலமைச்சரா இருக்கட்டும்!
அவர் வேலைய ஒழுங்கா பார்த்தா தமிழ்நாடு எப்படி எல்லா துறையிலயும் ரிவர்ஸ் கியர்ல போகும்?
ஏதாவது ஒரு துறையிலயாவது கடந்த திராவிட மாடல் ஆட்சிய விட த.வெ.க. ஆட்சி சிறப்பா செயல்பட்டு இருக்கா? எல்லாத்துலயும் சரிவு, வீழ்ச்சி, பின்னடைவு! இப்படி நான் சொல்லிட்டே போகலாம்.
இதை எதிர்த்து 31-ஆம் நாள் திமுக நடத்துற ஆர்ப்பாட்டம் என்பது, இந்த அரசுக்கான எச்சரிக்கை மணி! இதை Wake Up Call-ஆ எடுத்துட்டு முதலமைச்சர் செயல்படணும்!
மக்களுக்காகதான் நாம இருக்கோம். மக்களும் நம்மை நம்பித்தான் இருக்காங்க. அதனாலதான் இந்த ஆர்ப்பாட்டம்.
ஆளத் தெரியாத அரசுக்கு பாடம் புகட்டுவோம். முதலமைச்சரையும், தூங்கி வழியுற ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்புற அளவுக்கு, 31-ஆம் தேதி நம்மோட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற என்னோட வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. ஆவினை அழிக்கத் திட்டமிடுகிறதா தவெக அரசு! - முரசொலி தலையங்கம் கேள்வி!
-
ரூ.5,000 கோடி கொள்ளையடித்த பிரேம்குமாருக்கும், முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? : உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
“அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” : த.வெ.க அரசுக்கு CPM வலியுறுத்தல்!
-
”ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாற்றி இருக்கும் காவல்துறை” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை! : கே.என்.நேரு பேட்டி!