M K Stalin
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய யூத் விளையாட்டுப் போட்டிகளில் (Asian Youth Games 2025), கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆடவர் இறுதிச்சுற்றில் 35-32 என ஈரானை வீழ்த்திய இந்தியா, மகளிர் இறுதிச்சுற்றிலும் 75-21 என அதே அணியை அபாரவெற்றி கண்டது.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான அபினேஷ் மோகன்தாஸ் ஆடவர் அணியிலும், வீராங்கனையான கார்த்திகா (கண்ணகி நகர் கார்த்திகா) மகளிர் அணியிலும் இடம்பெற்றிருந்தனர். இந்த சூழலில் கபடி போட்டியில் தங்கம் வென்றுள்ள இந்த இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் பக்ரைனில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பிய கபடி தொடரில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கபடி வீரர்கள் இருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், வீரர்கள் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் இருவருக்கும் தலா ரூ.25 லட்சத்திற்கான உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
Asian Youth Games 2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.
கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.
கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.
நேற்று பைசன் காளமாடன் திரைப்படத்தில் நான் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !