M K Stalin
“கதராடைகளை அணிந்திடுவோம்! நெசவாளர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திடுவோம்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா நாளை (அக்.2) கொண்டாடவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அண்ணல் காந்தியடிகள் பிறந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் கதராடைகளை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய அஞ்சலி ஆகும்." என்று வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
கதராடைகளை அணிந்திடுவோம் !
நெசவாளர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திடுவோம் !!
அந்நிய நாட்டுத் துணிகளைப் புறக்கணித்து, இந்தியர்களாகிய நாம் அனைவரும் கதர் ஆடைகளை அணிந்திட வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் வாழ்நாள் கொள்கையாகும்.
”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரத்தினை ஏற்று, கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் வாழ்வினில் ஒளியேற்றிடத் தமிழ்நாடு அரசு, கதர் கிராமத் தொழில் வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நவீன கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் கதராடைகள் மற்றும் பட்டு ரகங்களை உற்பத்தி செய்திட வணிக அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு, நூற்போர் மற்றும் நெசவாளர்கள் பெருமக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், கதர் இரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியினை வழங்கி வருகிறது.
அண்ணல் காந்தியடிகள் பிறந்த நன்னாளில் அவரை நினைவு கூர்ந்திடும் வகையில் கதராடைகளை உடுத்துவதே அவருக்கு நாம் செய்திடும் மிகப் பெரிய அஞ்சலி ஆகும்.
அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாள் (02.10.2025) விழாவினை நாம் கொண்டாடும் வேளையில், அவரது கனவு மெய்ப்படவும், கதர்த் தொழிலைச் செழிக்கச் செய்யவும், நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு மேம்படவும், மாணவ - மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் அனைவரும் அதிகளவில் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
"சோதனைகளைத் தாண்டிசுதந்திரம் அடைந்தோம்; கதராடை அணிந்து காந்தியத்தைப் போற்றுவோம்; கதர் வளர்ச்சிக்காகக் கைகோர்ப்போம்'
Also Read
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!