M K Stalin
“நாடு முழுவதும் பலரது இதயங்களை வென்றுள்ளீர்கள்..” - திராவிட நாயகனுக்கு வாழ்த்து சொன்ன முதலமைச்சர்கள் !
திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மற்ற மாநில தலைவர்கள், முதலமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் :
"என் அன்புத் தோழர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கேரளா-தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்த உங்கள் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை, நமது தாய்மொழிகளின் பாதுகாப்பில் நீங்கள் நாடு முழுவதும் பலரது இதயங்களை வென்றுள்ளீர்கள். உங்களது மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றிக்கு வாழ்த்துகள் !" என்று வாழ்த்து தெரிவித்தார்.
ஆந்திர பிரதேச முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி :
"தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்த ஆண்டில் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் !" என்று வாழ்த்து தெரிவித்தார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் :
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் ஆயுளுடனும் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். " என்று வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் :
"தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்." என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் :
"மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும்!"
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே :
"தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீண்ட ஆயுளுடனுடம் ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகள் !" என்று வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் MP ராகுல் காந்தி :
"என் அன்புச் சகோதரர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் !" என்று வாழ்த்து தெரிவித்தார்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !