M K Stalin
"operation முடிஞ்சிருச்சு.. சீக்கிரமா school போகலாம்" -அறுவை சிகிச்சை முடிந்த சிறுமியிடம் முதல்வர் !
சென்னை, ஆவடியை அடுத்துள்ள வீராபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - செளபாக்கியம் தம்பதியதர். இவர்களின் மகள் டேனியா என்ற 9 வயது மகள் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்தும் இந்நோய் குணமாகவில்லை. இது மெல்ல மெல்ல சிறுமியின் வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்க முகம் முழுவதும் பரவி சிதைவு ஏற்படத்தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பெற்றோர்களிடம் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிக்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிறுமி டேனியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருக்கும் சிறுமி டேனியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் சிறுமியிடம், "அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்; விரைவில் விரைவில் பள்ளிக்குச் செல்லலாம். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று உறுதி தெரிவித்தார்.
மேலும் "விரைவில் பள்ளிக்குச் செல்லலாம். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று தெரி வித்தார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு முதலமைச்சர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !