M K Stalin
"ஆறுமுகசாமி ஆணைய முடிவு வெளியானால் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் கம்பி எண்ணுவார்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது, அவைத்தலைவர் அசோகன் மற்றும் மாவட்டச் செயலாளர் காந்தி ஆகியோர் கட்சிக்காக ஆற்றிய பணி குறித்து பாராட்டிப் பேசினார். இதனையடுத்து, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளால் நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.
அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ எள்ளளவும் கவலை இல்லை. நாட்டில் தற்போது நிலவும் வன்முறைகள், சட்டவிரோத செயல்களுக்கு அ.தி.மு.கவும், பா.ம.கவும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவளித்ததே காரணம் என மு.க.ஸ்டாலின் சாடினார்.
மோடி அரசு இயற்றியுள்ள சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டத்தால் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழவும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமி முதற்கொண்டு அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் லஞ்ச லாவண்யத்திலும், ஊழலிலும் கைத்தேர்ந்தவர்கள் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்ததே.
ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னிலையில் கமிஷன் பெறுவதில் முதலிடத்தில் இருப்பது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதேபோல பால்வளத்துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜியின் மீதான ஊழல் வழக்குகளிலும் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளது என குற்றஞ்சாட்டினார் மு.க.ஸ்டாலின்.
மேலும் பேசிய அவர், “ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான காலக்கெடு 7 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆணையத்தின் முடிவுகள் வெளியானால் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். உள்ளிட்டோர் சிறையில் கம்பி எண்ணுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!