M K Stalin
கொல்லப்பட்ட களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்தினருக்கு தி.மு.க. நிதியுதவி அறிவிப்பு!
திவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்ததோடு, அவரது உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
“எனது கணவர், குடும்பத்தைவிட போலீஸ் துறையையே அதிகம் நேசித்தவர்” என்று உயிரிழந்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி அளித்துள்ள பேட்டி மிகுந்த மன வேதனையைத் தருகிறது. தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மோசமான வாய்ப்பாகும். எனினும் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அ.தி.மு.க ஆட்சியினர் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்களோ இல்லையோ, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
வில்சன் கொல்லப்பட்ட இந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்று காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
சோதனைச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி - அங்கு பணியில் இருப்போருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உடனடியாக எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!