M K Stalin
இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெரும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரூபி மனோகரன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, கன்னியாகுமரி மக்களவை எம்பி வசந்த் குமார், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெருவார்கள் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தல் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடும் போது, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுகவின் கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் பற்றியும், நாட்டில் நடைபெற்று வரும் சர்வாதிகாரம், சட்டம் ஒழுங்கு இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தி மக்களிடத்தில் பேசவிருக்கிறோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!