M K Stalin
மக்களை ஏமாற்றியவர்கள் ஏமாந்து போனார்கள் - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின்
வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை அண்ணா செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளில் மிகப்பெரிய அளவில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
மத்திய மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் செய்த சதியால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையின் துணையோடு நடைபெற இருந்த தேர்தலை நிறுத்தி வைத்திருந்தார்கள்.
தற்போது நடைபெற்றிருக்கக் கூடிய வேலூர் தொகுதிக்கான தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றியை பெற்றிருக்கிறது. வேலூரில் பெற்ற வெற்றி முழுமையாக ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் எண்ணுகிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க அரசுகளின் அதிகார, பண பலத்திற்கு இடையில் தி.மு.க வெற்றி பெற்றிருப்பது பாராட்டக்கூடிய ஒன்று என பேசிய அவர், தேர்தல் வெற்றி பெற்ற கழக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அவரின் வெற்றிக்கு துணை நின்ற தி.மு.க முன்னோடிகள், நிர்வாகிகள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
இறுதியில், கடந்த தேர்தலில் மிட்டாய் கொடுத்து தி.மு.கவினர் ஏமாற்றியதாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அன்று மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாகச் சொன்னார்கள், இன்று கமர்கட்டு கொடுத்து ஏமாற்றியாதாக சொல்வார்கள் என கிண்டலாக பதிலளித்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!