M K Stalin
உறுதியளித்தபடியே நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்... நன்றி தெரிவித்த கரூர் மக்கள்...
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது.
இதனையடுத்து, வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்ற பாகுபாடில்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைவரிடத்திலும் நன்றி தெரிவித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் கரூர் மக்களவைத் தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். முன்னதாக, தேர்தல் பிரசாரத்தின் போது, கரூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதும் மக்களின் கோரிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
அதேப்போல், சொன்னதை செய்தும் காட்டிவிட்டார். அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பெண்களுக்கான தையல் பள்ளியை ஏற்படுத்திய மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், வாக்குக்காக மட்டும் உறுதியளித்துவிட்டு அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு இடையே பிரசாரத்தின் போது அளித்த உறுதியை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலினை அப்பகுதி மக்கள் புகழ்ந்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !