M K Stalin
“தோற்றாலும் மக்கள் மனதை வென்ற ராகுல் தலைவராக தொடரவேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளைப் பெற்று தோல்வியுற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டாம் என ராகுல் காந்தியிடம் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
“தேர்தலில் தோற்றிருந்தாலும் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள்; காங்கிரஸ் தலைவராக தொடருங்கள்; தலைவர் பதவியை விட்டு விலக வேண்டாம்.” என ராகுல்காந்தியிடம் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்கத்தில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துத் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!