M K Stalin

உதவாக்கரை அதிமுக ஆட்சியை விரட்ட இடைத்தேர்தல் ஒரு நல்ல சந்தர்ப்பம்: மு.க.ஸ்டாலின் சூளுரை!

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் (19ம் தேதி) நடைபெறுகிறது.

இறுதிகட்ட பிரச்சாரத்தில் தி.மு.க ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது; “இந்த வாக்குச்சேகரிப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்க்க முயற்றி செய்கிறார். கனவு காண்கிறார் என்று அவர் கூறுகிறார். உண்மையில் இது கனவு அல்ல, மே 23ம் தேதி நினைவாகும் என அவர் தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து ஆட்சியை தக்கவைத்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று மு.க.ஸ்டாலில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாத உதவாக்கரை அரசை ஆட்சியில் இருந்து விரட்டபட நல்ல இடைத்தேர்தல் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மோடியின் அடிமையாக ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியை இடைத்தேர்தல் மூலம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 22 தொகுதிகளிலும் தி.மு.க உறுதியாக வெற்றி பெறும் என்று மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வந்தால் எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி ஆட்சி எப்படி நீடிக்க முடியும்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மேலும் கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மேலும் வீட்டுமணைப் பட்டத்திட்டத்தை கொண்டுவரதிட்டமிட்டுள்ளோம். நகைக்கடன் தள்ளுபடி, குடிநீர் பிரச்சனை சரிசெய்யப்படும் என தெரிவித்தார். மேலும் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க நிச்சயம் நிறைவேற்றுவோம் என அவர் நம்பிக்கையளித்தார்.